போலி செய்திகளை தடுத்த வாட்ஸப் குரூப் அட்மின்கள்
அவதூறுகளை தடுக்க வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் எடுத்த நடவடிக்கை!
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில் நாடு முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சமூக வலைதளங்களில் தேவையில்லாத கருத்துகள், வதந்திகள் பரவுவதை தடுக்க காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்தது.
சில இடங்களில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ் அப் குரூப்களின் பதிவுகளால் தேவையில்லாத கருத்துகளால் சர்ச்சையில் சிக்காமல் இருக்க வாட்சப்பில் குருப் வைத்திருக்கும் அட்மின்கள் பலரும் தங்கள் குரூப்பினை 'அட்மின் ஒன்லி' மோடுக்கு மாற்றிவிட்டார்கள்
இதன்மூலம் அந்த குரூப்களில் அட்மின்கள் மட்டும்தான் மெசேஜ் அனுப்பமுடியும், வேறு யாரும் குரூப்களில் செய்தியினை அனுப்ப முடியாது...
இதனால் போலி செய்திகள் பரவாமல் தடுக்கப்பட்டு வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகளும் தவிர்க்க பட்டது..
மேலும் மதரீதியான பிரச்சனைகள் அதிகரிக்காமல் தவிர்க்கப்பட்டது... செய்திகளை தவிர மற்ற விமர்சனங்களும் தவிர்க்கப்பட்டது...
அதாவது, குரூப் யார் வேண்டுமானாலும் கருத்து இடுவதற்கு பதில் அட்மின் மட்டுமே கருத்துகளை பதிவிடும் வகையில் Admin Only நிலைக்கு மாற்றிவிட்டனர்.
முன்னதாக சமூக வலைதள பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக பதிவிடுமாறு கேட்டுக்கொண்டனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பான அறிவுறுத்தல் வாட்ஸ் அப்பில் பரவ தொடங்கியதையடுத்து
தமிழக உட்பட நாடு முழுவது இந்த யுக்தி வெற்றிக்கு வழிவகுத்தது....
No comments:
Post a Comment